செய்தி தமிழ்நாடு

பொது மக்களின் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மத்திய அரசு ஸ்டேட் பேங்க் எல்ஐசி மற்றும் தேசிய உடமைக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பொது மக்களின் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்றது.

இதில் அரிமளம் வடக்கு வட்டார தலைவர் அர்ஜுனன் தெற்கு வட்டாரத் தலைவர் எம்.எம். கணேசன், பொன்னமராவதி வடக்கு வட்டார தலைவர் கிரிதரன், தெற்கு வட்டார தலைவர் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது இப்ராகிம், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு, பாக்கியம் மெய்யப்பன், ஆலங்குடி நகரத் தலைவர் எம்.எஸ்.அரங்குலவன்  உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசே பிஜேபி அரசே மோடி அரசே மோசடி அரசே துணை போகாதே துணை போகாதே அம்பானி அதானிக்கு துணை போகாதே தாரை பார்க்காதே தாரை பார்க்காதே வங்கி முதலீடுகளை அம்பானிக்கு தாரை வர்க்காதே எல் ஐ சி முதலீடுகளை அம்பானிக்கு தாரை வாக்காதே குறைத்திடு குறைத்திடு பெட்ரோல் டீசல் கேஸ் விலைகளை குறைத்திடு அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என  முழக்கங்களையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!