பேஸ்புக் லைவ்வின் போது முற்றிய வாக்குவாதம்; கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பெண்!
பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் ஒருவர் கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தம்பதி ஒருவர் பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து, கணவனை மனைவியே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிசிசிப்பியில் சனிக்கிழமை அதிகாலை கடேஜா மிஷேல் பிரவுனின் வீட்டில் குழப்பம் ஏற்பட்டதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், லொன்டெஸ் கவுண்டியின் காவல்துறை அதிகாரிகள் விரைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் அந்த வீட்டில் வசித்த 28 வயதுடைய ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்து இருப்பதை கண்டறிந்தனர்.அத்துடன் அந்த இடத்தில் இருந்து 9 மிமீ கைத்துப்பாக்கியை கைப்பற்றியதுடன் பேஸ்புக்கீல் லைவ் ஸ்ட்ரீம் செய்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இது சோகமான மற்றும் புத்திசாலித்தனமற்ற கொலை நிகழ்வு என்று ஷெரிப் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கொலையாளி என்று கருதப்படும் பெண் லொன்டெஸ் கவுண்டி வயது வந்தோர் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.சம்பந்தப்பட்ட பெண் குற்றச்சாட்டுகளுக்காக காத்திருக்கும் வரை துப்பாக்கிச் சூடு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.