புதிய மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்யக் கோரி சாலை மறியல்
2014ம் ஆண்டு முதல் முயற்சி செய்து பலத்த எதிர்ப்புக்கும் இடையில் 2019ம் ஆண்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும் இதை உடனடியாக திருத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஊழியர் சங்கம்,
புதுக்கோட்டை மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியல் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் இணைந்து 15 நிமிடங்கள் அனைத்து வாகனங்களையும் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பிரதான பகுதியான அரசமரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தின் போது, மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த சாலைமறியல் காரணமாக ஆலங்குடி நகரில் இரண்டு புறமும் பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.அத்தோடு, அரசு மோட்டார் தொடர்பான அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க வேண்டும் எனவுமு கோரிக்கை வைக்கப்பட்டது.