புடினிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் – மறுக்கும் ரஷ்யா : வரவேற்கும் அமெரிக்கா!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இதனை ரஷ்யா மறுத்துள்ளது.
இருப்பினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த செயற்பாடு மிகவும் வலுவான கருத்தை கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை ரஷ்யாவோ அல்லது அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள ஜோ பைடன், இது மிகவும் வலுவான கருத்தைச் சொல்கிறது தான் எண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெளிவான போர் குற்றங்களை செய்துள்ளதாகவும், போர்க்குற்றங்களைச் செய்தவர்களுக்கான பொறுப்புக்கூறலை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், புடின் அமெரிக்காவிற்கு வருகை தந்தால், அவரை கைது செய்யுமாற சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் பைடன் கூறுவாரா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி எவ்வித பதிலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.