ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா – 200 பெண்களின் புகைப்படங்கள்

பிரான்ஸில் வணிக நிலைய பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

பரிசின் நான்காம் வட்டாரத்தில் உள்ள பிரபலமான BHV கட்டிடத்தில் உள்ள பெண்கள் கழிவறையிலேயே இந்த கமரா பொருத்தப்பட்டுள்ளது.

கண்களுக்குத் தெரியாக சிறிய ரக கமராவை புகை சமிக்கையை அடையாளம் காணும் ‘சென்சார் கருவியுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது.

குறித்த கட்டத்தின் இலத்திரணியல் வேலைப்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ளும் Thales நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் இதுவரை 200 வரையான பெண்கள் மற்றும் சிறுமிகளது புகைப்படங்களை இந்த கமரா ஊடாக் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி