செய்தி தமிழ்நாடு

பா.ஜ.காவை வீழ்த்த வியூகம் வகுத்த மு.க.ஸ்டாலின்!

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து காய் நகர்த்தி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க.வை வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார்.

அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதலமைச்சர் ஈடுபடவேண்டும். நாடு முழுவதும் சுற்றுப்பயணமாக சென்று மாநில அரசியல் தலைவர்களை அவர் சந்திக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். தி.மு.க. அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.

பா.ஜ.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திடிரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்துவிட்டார். காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான் எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி