பாரிஸில் 9,500 தொன் கழிவுகள் – அகற்ற முடியாமல் திணறல்
பாரிஸில் தனியார் முகவர்களின் உதவியோடு பொலிஸார் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்த போதும், தற்போது 9,500 தொன் வரையான கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் 200 தொன் கழிவுகள் பாரிசில் கொட்டப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 9,500 தொன் கழிவுகள் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை இது தொடர்பான சந்திப்பு ஒன்று பாரிஸ் நகரசபையில் இடம்பெற்றிருந்தது. முன்னுரிமை அளிக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படும் என நகரசபையினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து கடந்த இருவாரங்களாக தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)