செய்தி

பாரிஸில் குழந்தையை கொன்ற தந்தை – 18 வருடங்களின் பின்னர் வெளிவந்த இரகசியம்

பாரிஸில் குழந்தை கொல்லப்பட்டமை தொடர்பில் 18 ஆண்டுகளின் பின்னர் குழந்தையின் தந்தை சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மூன்று மாத குழந்தை ஒன்று கொல்லப்பட்டதை அடுத்து, தந்தை 18ஆண்டுகளின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது.

வால் டு யாச் பகுதியில் இந்த கொலைச் சம்பவம் கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. வேலைக்குச் சென்று திரும்பிய குழந்தையின் தாய் – தொட்டிலில் தனது மூன்று மாத குழந்தை இறந்து கிடந்ததை பார்த்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றது. உடற்கூறு பரிசோதனைகளில் தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. குழந்தை அழுததாகவும், குழந்தைக்கு மெத்தை ஒன்று வைத்து அதில் கிடத்தியதாகவும் குழந்தையின் தந்தை வாக்குமூலம் அளித்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் கடந்த 18 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் திகதி அவர் மேலதிக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டார்.

பின்னர் அவர் மீது மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினரின் கண்காணிப்பில் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி