செய்தி தமிழ்நாடு

பாதையாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு இலவச நீர் மோர்

சென்னை மண்ணடி பவளக்கார தெருவில்  அமைந்துள்ள காரைக்குடி அறுவிடுதி முருகன் மற்றும் தேவகோட்டை அறுவிடுதி முருகன் என இரண்டு முருகனையும் தேரில் வைத்து வீதி உலாவாக,

ஒன்றன்பின் ஒன்றாக வடசென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள நகரத்தார் மண்டபம் வரை அழைத்துச் சென்று அங்கு ஐந்து நாட்கள் வைத்து மாசி உற்சவத்தின் போது சிறப்பு பூஜை செய்வது ஆண்டுதோறும் வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மண்ணடியிலிருந்து திருவொற்றியூர் நகரத்தார் மண்டபம் வரை பாதையாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு ஜி.ஏ.ரோடு சுற்று வட்டார வியாபாரிகள் நல சங்கம் சார்பாக மத நல்லிணக்க நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இதை வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு ஜி.ஏ. ரோடு சுற்று வட்டார வியாபாரிகள் நல சங்க தலைவர் தமீம் அன்சாரி, செயலாளர் தயாளன் பொருளாளர் சந்திரசேகர்,

துணைத்தலைவர்கள் நாகேந்திரன்,சுப்பிரமணி அய்யனார்,பழனி ராஜசேகர், சந்திவீரன், துணைச் செயலாளர்கள் ரமேஷ், வேலு,சுப்புராஜ், ஆறுமுகம், அப்பாஸ் அலி, முருகன், கௌரவ தலைவர் தனசேகர்,சங்க ஆலோசகர் கே. யுவராஜ்,

இளைஞரணி P.செந்தில்குமார், வி.முத்துவேல், எஸ்.எஸ்.கிஷோர்,  ஐ.ராகேஷ் ஜெயின், டி.நந்தகோபால், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி