பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி – அதிகரிக்கும் மரணங்கள்
ஆப்பிரிக்க நாடான கின்னியாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதுவரையில் 90 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத நம்பிக்கையின் பெயரால் மத குருமார்கள் மக்களை ஏமாற்றும் வழக்கம் பல காலம் தொட்டே நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
தற்போது கென்யாவை சார்ந்த பாதிரியார் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் 90 பேர் பலியாக இருக்கின்றனர்.
ஆப்பிரிக்க நாடாநாயக்கனியாவை சார்ந்த பால் மெக்கன்சி என்ற பாதிரியார் உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை காணலாம் என தீவிரமாக பிரச்சாரம் செய்திருக்கிறார். இதனை நம்பி பல நூறு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அவ்வாறு பட்டினி கிடந்த மக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது வரை 90 எட்டி இருக்கிறது. மேலும் 213 பேர் காணாமல் போனதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது.