பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு முதற்கட்ட நிவாரணம் – 106 மில்லியன் ரூபா வெளியிடப்பட்டது
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரணத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் 106.2 மில்லியன் ரூபா நிதியை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பிரதேச செயலகங்களால் உறுதிப்படுத்தப்பட்ட 531 பதிவுசெய்யப்பட்ட தொழிலதிபர்கள் தலா 200,000 ரூபாவை மானியமாகப் பெறுவார்கள் என தொழில்துறை துணை அமைச்சரின் செயலாளர் தெரிவித்தார்.
இதற்மைய கம்பஹா, கொழும்பு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கேகாலை, மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்ட செயலகங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக முழுஅளவில் அல்லது பகுதியளவு இழப்புகளை சந்தித்த சுமார் 10,000 தொழிலதிபர்களை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து,
அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்தத் துறையை உறுதிப்படுத்துவதும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதும் இந்த நிவாரணத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி உதவிக்கு மேலதிகமாக, எதிர்கால இயற்கை பேரழிவுகளுக்கு தொழில்துறை துறையின் மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான நீண்டகால திட்டத்தை அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.





