செய்தி தமிழ்நாடு

பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்

வாலாஜாபாத் ஒன்றியம் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமோக நெல் விளைச்சல் காரணமாக முன்கூட்டியே நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்

க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளான சிட்டியம்பாக்கம், தொடூர், 144 தண்டலம், பரந்தூர், சிறுவாக்கம் ஊராட்சி மோட்டூர் கிராமம் ஆகிய பகுதிகளில் நேரடி

நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நேரில் பார்வையிட்டனர். மேலும் கூடியிருந்த பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற திட்டத்தின் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் படிவத்தை திமுக கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார். இவற்றால் ஊராட்சி பகுதிகளில் உள்ள புதிய உறுப்பினர்கள் இளைஞர்கள்

ஆகியோரை வீட்டுக்கே சென்று  நேரடியாக சந்தித்து விருப்பமுள்ளவர்களை உறுப்பினர்களாக சேர்க்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் படிநெல்லி பாபு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகதாஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி