பக்தவச்சலப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள அருள்மிகு என்னைப் பெற்ற தாயார்பக்தவாசலப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயம்..புகழ்பெற்ற 108 திவ்ய தேசத்தின் 58 வது திவ்யதேச மாத அமையப்பட்டுள்ளது இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசி மாதம் மகா பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்…
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 10 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம் இன்று மூன்றாவது நாள் விடியற்காலை 5 30 மணி அளவில் தங்க கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட மாலை ,சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்தார்,,
கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுவாமி யானை ஊர்வலத்துடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்தது.. .
பக்தர்கள் வீதி உலாவின் போது சாமிக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஆரத்தி எடுத்தும் பெருமாளை பய பக்தர்களின் வழிபட்டனர் ,,
ஆங்காங்கே பக்தர்களுக்கு ராமானுஜம் டிரஸ்ட் மற்றும் பக்தர்களும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது…
இந்த பிரமோற்சவ திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்….
நூற்றுக்கும் மேற்பட்ட திருநின்றவூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்