நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு – துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி!
நேபாளத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்து மற்றும் இஸ்லாமிய குழுக்களுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் யாரும் தெருக்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அனைத்து கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்தை மீறுபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 130 கிலோமீட்டர் (80 மைல்) தெற்கே அமைந்துள்ள பிர்குஞ்சின் (Birgunj) தெருக்களில் ஆயுதமேந்திய வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ரோந்து செல்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





