இலங்கை செய்தி

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிகம் சம்பளம்!

இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தென்கொரியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரிய வேலைகளுக்கான இலங்கை இளைஞர்களைத் தெரிவு செய்வது தொடர்பான நேர்முகத் தேர்வுகள் மற்றும் பயிற்சிகளை ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிம் பியோங் போ உள்ளிட்ட குழுவினர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை நேற்று (04) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் எனவும் மேலும் பயிற்சி பெற்ற இலங்கை இளைஞர்களை நாட்டிற்கு வேலைவாய்ப்பிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை