துருக்கிக்கு ஏற்படவுள்ள மற்றுமொரு ஆபத்து!
துருக்கிக்கு ஏற்படவுள்ள மற்றுமொரு ஆபத்து!
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் துருக்கியின் தென் பகுதியை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்தான்புல் நகரை சேர்ந்த எஞ்சியுள்ள ஒரு கோடியே 50 இலட்சம் மக்கள் மற்றுமொரு அபாயத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அங்கு கட்டங்களை நிபுணர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கட்டடங்கள் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியானவை அல்ல என்பது சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.
பூகோளத்தில் நில அதிர்வு ஏற்படக்கூடிய மத்திய ரேகைக்கு மிக அண்மையில் துருக்கி உள்ளதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.