செய்தி தமிழ்நாடு

திருடர்களின் அட்டகாசம் கோவை மக்கள் பீதி

கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தனது வேலையை முடித்து விட்டு இரவு தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

பின்னர் காலையில் வந்து பார்த்த பொழுது வாகனம் காணாமல் போயி இருந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முகேஷ் பட்டேல் புகார் அளித்தார். புகாரின் பேரில்  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காவல் துறையினர்  அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது கொள்ளையன் ஒருவன் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருக்கின்றன. அந்த  காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தையும், கொள்ளையனை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர் .

இதேபோன்று கோவை ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 4 இருசக்கர வாகனங்கள்,  மர்ம நபர்களால் திருடி சென்று இருப்பது. வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!