திருக்கழுக்குன்றம் சித்திரை பெருவிழாவில் திரளான பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் 3ம் நாள் நிகழ்வான சைவ அடியார்கள் என்று கூறப்படும் 63 நாயன்மார்களின் திருவீதி உலா இன்று நடைபெற்றது வேதகிரிஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வளமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கிரிவல பாதையை சுற்றிவந்தது வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காட்டி தரிசனம் செய்தனர் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 63 நாயன்மார்களை தரிசனம் செய்ததுடன் மலை வலம் வந்தனர், அதனை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஏழாம் நாள் திருத்தேரோட்டம் வரும் 01.05.2023 அன்று நடைபெற உள்ளது 04.05.2023 அன்று சங்கு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவில் ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்க படுகிறது.