திருகோணமலை மார்பில் பீச் கடற்கரையில் குளிப்பதற்கு தடை!!
திருகோணமலை மார்பில் பீச் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் கடலில் குளிப்பதற்கு முற்பட்டு வருவதாகவும் இதனால் உயிர் சேதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த அனர்த்தத்தை தடுக்கும் முகமாக மார்பில் பீச் பகுதியில் குளிப்பதற்கு தற்பொழுது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் மார்பில் பீச் கடற்கரைக்கு செல்வதற்கு பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்ற இதே வேளையில் குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படாமை காரணமாக சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே குறித்த வீதியை புணரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.




