திருகோணமலை பிரதான சந்தைகளின் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்!!
திருகோணமலையில் பிரதான சந்தையாக காணப்படுகின்ற மீன் சந்தை, பிரதான காய்கறி சந்தை மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று (22) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை நகராட்சி மன்ற மேயர் முதலமைச்சின் செயலாளர், மாகாண ஆணையாளர், இலங்கை மீன்பிடி கூட்டத் தாவனத்தின் அதிகாரிகள் நகர அபிவிருத்தி இயக்குனர் மற்றும் மீன் சந்தை, காய்கறி சந்தை, பேருந்து நிலையத்தின் வர்த்தக சங்கங்களும் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மரக்கறி சந்தை கேள்வி கோரலும் அரச நிர்வாகத்தின் அரசியல் தலையீடு
மரக்கறி சந்தை மற்றும் மீன் சந்தையை எவ்வாறு வியாபாரிகளுக்கு வழங்குவது மற்றும் விலை மனுக்கோரலின் போது எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை விலை மனுக்கோரல் விண்ணப்பங்கள் கோருவது பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.






