தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தக்க எதிர்வினை கொடுப்பார்
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் தாம்பரம் மாநகர திமுக சார்பில் முதல்வர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.அப்போது திருச்சி சிவா எம்.பி. பேசும்போது,
ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடைசெய்ய வேண்டும் என்ற சட்டதிருத்த மசோதாவை ஆளுநர் தற்போது திருப்பி அனுப்பி உள்ளார்.
இந்த முறை திருப்பி அனுப்பி வீட்டீர்கள், இதே சட்டமசோதாவை மீண்டும் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால் எப்படி திருப்பி அனுப்பமுடியும்.ஒப்புதல் கொடுத்தே தானா ஆகவேண்டும்..
இதற்கு தக்க எதிர்வினையை தமிழக முதல்வர் கொடுப்பார்.ஏற்கனவே சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை மாற்றி படித்தபோது உடனடியாக எதிர்வினை ஆற்றியவர் முதல்வர் முக.ஸ்டாலின்…
இன்று உலக மகளீர் தினம் மகளிருக்கான அதிகமான உரிமையை கொடுத்தது திமுக தான்.முதல்முதலில் இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியவர் தலைவர் கருணாநிதி.
அதேபோல் தான் தற்போது கலைஞரின் மகன் முக.ஸ்டாலினும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம். வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கியர் நமகு முதல்வர்.