ஜே.வி.பியுடனான அரசியல் உறவை வலுப்படுத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி!
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPC), ஜே.வி.பிக்கும் (JVP) இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் கொழும்பு,(colombo) பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்கு (JVP headquarters) நேற்று (24) சென்றிருந்தனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் ( Xizang) தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் (Wang Junzheng) தலைமையிலான குழுவினரே இவ்வாறு சென்றிருந்தனர்.
ஜே.வி.பியின் செயலாளர் (JVP Secretary) ரில்வின் சில்வா (Tilvin sliva) உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், சீன குழுவினரை வரவேற்றனர்.
அதன்பின்னர் வாங் ஜூவான்செங்கிற்கும், ரில்வின் சில்வாவுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஜே.வி.பி.க்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து இதன்போத விரிவாக கலந்துரையாடப்பட்டது.
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசாங்கம் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு ஜே.வி.பி. செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.





