ஜெர்மனியில் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் வாழும் 15 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் வருவாயில் பாதியை வாடகை செலுத்துவதற்காகவே செலவிடுகிறார்களாம்.
பெடரல் புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ள தகவல் ஜேர்மனியில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தங்கள் வருவாயில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை வீட்டு வாடகைக்காக செலவிடுவதாக பெடரல் புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
3.1 மில்லியன் குடும்பங்கள், குறைந்தபட்சம் தங்கள் வருவாயில் 40 சதவிதத்தையும், 1.5 மில்லியன் குடும்பங்கள் தங்கள் வருவாயில் பாதியையும், வெறும் வாடகைக்காக மட்டும், அதாவது, மின்கட்டணம், வீட்டை வெப்பப்படுத்துவதற்கான கட்டணங்களை சேர்க்காமல், வாடகைக்காக மட்டுமே செலவிடுவதாக தெரியவந்துள்ளதாக அந்த ஏஜன்சி தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் 19.9 மில்லியன் குடும்பங்களில் சுமார் 16% பேர் தங்கள் வருமானத்தில் குறைந்தது 40% வாடகைக்கு செலவிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 1.5 மில்லியன் குடும்பங்கள், வாடகைக் கட்டணத்திற்காக வருமானத்தில் பாதிக்கு மேல் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு மைக்ரோ சென்சஸை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில், 27.8% ஜெர்மன் குடும்பத்தினர் வருமானத்தில் கால் பகுதிக்கு மேல் வாடகைக்கு செலவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.