ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமிகள்

ஜெர்மனியில் மீண்டும் சிறுமிகளினால் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனி நாட்டில் தற்பொழுது சிறுமிகள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

குறித்த தாக்குதல்களை மேற்கொண்டவர்களும் சிறுமிகளாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது 14 வயது சிறுமி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான கியுரினில் உள்ள அதன் தலைநகரமான எயார்போட்டில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது இரண்டு 13 வயது சிறுமிகள் 14 வயது சிறுமி ஒருவரை புகையிரத நிலையத்தில் துரத்தி சென்ற நிலையில் பின்னர் 14 வயது சிறுமியை தண்டவாளத்தினுள் தள்ளி வீழ்த்தியுள்ளனர்.

பின்னர் இவ்வாறு விழுந்த சிறுமியின் மீது இவ்விரு சிறுமிகளும் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் காணொளி பதிவு செய்யப்பட்டு சமூகவலைத்தளஙகளில் பகிரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொலிஸார் விசாரணைகளை முடக்கியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் சக பாடசாலை  மாணவிகளால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இங்கு நினைவுப்படுத்தக்கூடிய விடயமாகும்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி