ஜெர்மனியில் நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் – தடுக்கும் முயற்சியில் அரசாங்கம்
தற்பொழுது அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஜெர்மனி அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பெருகி வரும் அகதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில் பல நகரங்கள் மத்திய அரசாங்கத்திடம் நிதி உதவியை கோரியுள்ளன.
இதேவேளையில் ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லின் அவர்கள் மற்றும் மத்திய உள்நாட்டு அமைச்சர் நான்ஸி பெசர் அவர்கள் இந்த வேண்டுதலுக்கு செவிசாய்க்காமல் அவர்கள் இதனை நிராகரித்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியின் மத்திய அரசாங்கமானது அகதிகளை பராமரிப்பதற்கான 4.4 பில்லியன் யுரோக்களை செலவிட்டுள்ள நிலையில் நகர நிர்வாகங்கள் மொத்தமாக 2.75 பில்லியன் யுரோக்களை செலவிட்டதாகவும் தெரியவந்திருக்கின்றது.
ஜெர்மனியின் உள்ளுர் ஆட்சி அமைச்சினுடைய தற்போதைய நடவடிக்கையை கண்டித்து பொலிஸ் தொழிற்சங்கமானது தனது கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது.
ஜெர்மனியின் உள்நாட்டு அமைச்சர் நான்ஸி பெசர் அவர்கள் ஜெர்மனியில் மட்டுப்படுத்தப்பட்ட அகதிகளை தான் எடுக்க முடியாது.
அதேவேளையில் இந்த வேண்டுதலுக்கு செவிசாய்க்கவும் முடியாது என்றும் தெரிவித்து இருக்கின்றார்.