ஜெர்மனியில் நீண்ட நாள் சர்ச்சைக்கு கிடைத்த தீர்வு!
ஜெர்மனி நாட்டில் போதை பொருள் வைத்திருக்கலாமா என்ற கேள்வி பல நாட்களாக எழுந்து வந்துள்ள நிலையில் தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கேள்விக்கு ஜெர்மனியின் சமஷ்டி சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜெர்மனியில் கஞ்சா என்று கூறப்படுகின்ற போதை பொருளை சட்ட ரீதியான முறையில் கொள்வனவு செய்ய முடியுமா அல்லது சட்ட ரீதியான முறையில் இந்த போதை பொருளை வைத்திருக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் பல நாட்களாக இடம்பெற்று வந்துள்ளன.
அதாவது சில பொது நல வாதிகள் போதை பொருள் பாவணை என்பது சமூக சீர்கேடான விடயம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளையில் ஏப்ரல் 12 ஆம் திகதி ஜெர்மனியின் சமஷ்டி சுகாதார அமைச்சர் காள் லௌட் அவர்கள் புதிய ஒரு ஆலோசனையை முன்வைத்து இருக்கின்றார்.
அதாவது 25 கிராமில் இருந்து 50 கிராம் வரையிலான கஞ்சாவை தனிப்பட்ட ஒரு நபர் தனது பாவரணக்காக வைத்திருக்க முடியும் என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கின்றார்.