ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அதிர்ச்சி – கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்ட சிறுமி

ஜெர்மனியில் சிறுமியின் கொலை சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டில் வீசப்பட்ட சிறுமி ஒருவரின் உடலை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஜெர்மனியில்13 ஆம் திகதி ரைலான்வாஸ் மாநிலத்தில் உள்ள வொரைடன் பேர்க் என்ற கிராமத்தில்  12 வயது சிறுமியானவர் தனது பெண் சிநேகிதியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த 12 வயது சிறுமி சிநேகிதியிடம் இருந்து 3 கிலோ மீற்றர் துரத்தில் உள்ள தனது வீட்டுக்கு காட்டு பாதையின் ஊடாக வந்திருக்கின்றார்.

இதேவேளை இந்த சிறுமியானவர் தனது வீட்டை சென்று அடையாத காரணத்தினால் சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிஸார் நேற்று முன்தினம் பலத்த தேடுதல் ஈடுப்பட்ட போது கொலை செய்யப்பட்ட நிலையில் காட்டு பிரதேசத்தில் சிறுமியின் உடலை  கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

தற்போது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளார்கள் என்றும் இந்த கொலையின் பின்னணி என்ன என்பதை பற்றி ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிய வந்திருக்கின்றது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!