ஐரோப்பா செய்தி

ஜெர்மனின் 49யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியாகிறுள்ள முக்கிய அறிவிப்பு!

ஜெர்மனியில் 49 யுரோ பெறுமதியான பிரயாண அட்டை தொடர்பாக தகவல் வெளியாகியாகியுள்ளது.

49 யுரோ பிரயாண டிக்கட் ஆனது எப்பொழுது நடை முறைக்கு வரும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.மே மாதம் 1ம் திகதி இந்த புதிய அட்டையானது நடைமுறைக்கு வர இருக்கின்றது. ஏப்பிரல் மாதத்தில் பல இடங்களில் இந்த பிரயாண அட்டைகளை வாங்க முடியும் என தெரிய வந்திருக்கின்றது.இதே வேளையில் சம உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் மற்றும் மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஓய்வுதியத்தை பெறுகின்றவர்களுக்கு ஏதாவது சலுகை கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளையில் இவ்வகையாக ஏற்கனவே சொஸியா டிக்கட்டு என்று சொல்லப்படுகின்ற சம உதவி பணத்தில் வாழுகின்றவர்களுக்கு வழங்கப்பட்ட பிரயாண அட்டை விடயத்தில் சில மாநிலங்கள் தனிச்சசையான முடிவை எடுப்பதற்கு உரிமை உண்டு என்பது தெரியவந்திருக்கின்றது.

 

 

இந்நிலையில் குறிப்பாக நீடசக்சன் மாநிலமானது தனது மாநிலத்தில் இவ்வகையாக சம உதவி பணத்தில் வாழுகின்றவர்களுக்கு சொஸியா டிக்கட் என்று சொல்லப்படுகின்ற டிக்கட்டை 29 யுரோக்கு விற்க உள்ளதாகவும், மேலும் இந்த டிக்கட் ஆனது அந்த மாநிலத்தில் மட்டும் நடைமுறைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிய வந்திருக்கின்றது.மேலும் பல மாநிலங்கள் வெவ்வேறு வகையான நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது. தொழில் வழங்குனர்கள் தங்களது பணியாளர்களுக்கு job டிக்கட் என்று சொல்லப்படுகின்ற ஒரு டிக்கட்டை வழங்க முடியும்.

இந்த job டிக்கட் என்று சொல்லப்படுகின்ற இந்த பிரயாண அட்டைக்கு அந்த நிறுவனமானது 25 வீதமான பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு இந்த தொழில் நிறுவனங்கள் இந்த 25 வீதமான பணத்தை முதலீடு செய்தால் அரசாங்கமானது மேலதிகமாக 5 வீதமான பணத்தை இந்த பிரயாண அட்டை வாங்குவதற்கு வழங்க உத்தேசித்து உள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி