செய்தி தமிழ்நாடு

முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் கார்த்திக் உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மகனுமான மதுரை அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்திக் குடும்ப பிரச்சனை காரணமாக கையை.

கத்தியால் அறுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஜி.ஆர் கார்த்திக்கின் உடலானது அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நீர்கோழியேந்தல் என்ற கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

ஜி.ஆர். கார்த்திக்கின் காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் முதல் பரிசுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதியில் ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த கார்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

(Visited 3 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி