ஜபோர்ஜியா அணுவாலையில் அமெரிக்காவின் எரிபொருள் பயன்பாட்டை நிறுத்த திட்டம்!
ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்கோவின் படைகள் கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றியது.
சோவியத் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணுமின் நிலையத்தை முதலில் ரஷ்யா பயன்படுத்தியது. பின்னர் அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸிலின் கைக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு, ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்ததால் ஆலையைக் கையகப்படுத்தியது மற்றும் அதன் அருகே தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால் அணுசக்தி பாதுகாப்பு நெருக்கடியின் மையத்தில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆலையின் பொறுப்பில் இருக்கும், ரஷ்ய அணுசக்தி நிறுவனமான Rosenergoatom இன் பொது இயக்குநரின் ஆலோசகரான Renat Karchaa, Interfax இடம் சுமார் நான்கு வருட மதிப்புள்ள அமெரிக்கத் தயாரிப்பான எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாகக் கூறினார்.
ஆனால் ரஷ்ய நிர்வாகம் அதன் சொந்த தொழில்நுட்பத்தை மேலானது என்று கருதுவதால் அந்த எரிபொருளை மாற்ற முற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.