செய்தி தமிழ்நாடு

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கால்நடை மருத்துவ மனையில்  வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை காஞ்சிபுரம் மண்டலம், செங்கல்பட்டு கோட்டம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2021 – 2022 வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் திருக்கழுக்குன்றத்தில் நடைப்பெற்றது.

திருக்கழுக்குன்றம் கால்நடை உதவி மருத்துவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம் எல் ஏவும், திமுக திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ.தமிழ்மணி மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு செல்ல பிராணிகளுக்கு  குடற்புழு நீக்க மருந்தினை வழங்கி முகாமினை துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் கொண்டு வரப்பட்ட பிறந்த மூன்று மாதமே ஆன செல்ல பிராணிகளுக்கும் மூன்று மாதத்திற்கு மேற்ப்பட்ட செல்ல பிராணிகளுக்கும், தடுப்பூசி போடப்பட்டது,

இதில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம் கே தினேஷ், பேரூராட்சி துணை செயலாளர் சரவணன் கால்நடை ஆய்வாளர் மீனாம்பாள், கால்நடை மருத்துவ உதவியாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

(Visited 48 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி