ஐரோப்பா செய்தி

சிறுபடகுகளில் பிரித்தானியா வருவோருக்கு காத்திருக்கும் தண்டனை… அமைச்சர் சுவெல்லா வெளிப்படை

சிறுபடகுகளில் இனி பிரித்தானியா வந்து சேரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சிறைவாசம் காத்திருகிறது என உள்விவகார அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை விளக்கும் போது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. சிறுபடகுகளில் இனி பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஜாமீன் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்றார்.

சட்டவிரோதமான இந்த சிறுபடகு பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழிகளை அரசாங்கம் அறிவிக்கும் என்றார் சுவெல்லா பிரேவர்மேன்.ஆனால், ரிஷி சுனக் அரசாங்கத்தின் இந்த திட்டமானது கொடூரத்தின் உச்சம் எனவும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடுப்பது போன்றது எனவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குவதற்கு என பிரித்தானிய அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தில் நாளுக்கு 6 மில்லியன் பவுண்டுகள் செலவிடுகிறது.கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர்கள் ஏன் இதற்கான நிர்ந்தர தீர்வை இதுவரை கொண்டுவரவில்லை எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது. அரசாங்கம் வெற்று முழக்கத்தை மட்டுமே முன்வைக்கிறது ஒரு தீர்வை அவர்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி