சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!
அக்குரேகொடவில் சற்றுமுன் இடம்பெற்ற நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்பொருள் அங்காடிக்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வாகனத்தில் இருந்த இருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





