சர்வதேச பருத்தி கவுன்சில் அமெரிக்கா கருத்தரங்கம்
அமெரிக்க பருத்தி மூலம் உச்ச செயல்திறனை அடைதல்” எனும் தலைப்பில் சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.முன்னதாக இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதில் தெற்காசியாவிற்கான காட்டன் யு.எஸ்.ஏ சப்ளை சர்வதேச பருத்தி கவுன்சில் இயக்குனர் வில்லியம் பெட்டன்டோர்ப், சுபிமா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ், இந்திய மற்றும் இலங்கைக்கான சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பீஷ் நரங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.உலக அளவில் பருத்தியின் மிகப்பெரிய நுகர்வோராக இந்தியா இருப்பதாகவும்,இந்திய ஆலைகளுக்கு சுபிமா திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்…உலக அளவில் பருத்தி தொடர்பான நுகர்வு தற்போது அதிகரித்து , பருத்தி துறையில் தற்போது புதிய புரட்சி ஏற்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்… தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பருத்தி தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இதில், தொழில்துறையின் வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியும் என்பது பற்றிய நுண்ணறிவு தொடர்பான அமர்வுகள் இடம்பெற்றன.இந்த கருத்தரங்கில் முன்னணி இந்திய ஜவுளி ஆலைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் பருத்தி தொழில் சார்ந்த வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.