கோடை மழை பெய்ததால் பொன் ஏர்விடும் விழா நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரி விவசாயிகள் பொன் ஏர் இடுதல் என்ற பெயரில் ஆண்டுதோறும் சித்திரையில் முதல் மழை பெய்ததும்,
அதற்குப்பிறகு வரும் நல்ல நாளில் இந்த பொன் ஏர் விடும்
நிகழ்ச்சியை
கொண்டாடுகின்றனர். இங்கு இரு தினங்களுக்கு முன் இந்த தமிழ்புத்தாண்டின் முதல் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இன்று பொன் ஏர் விடும் விழா நடந்தது. முன்னதாக சேவுகப்பெருமாள்
கோயிலில் இருந்து மரியாதையுடன் தேவஸ்தான ஊழியர்கள், கிராமத்தார்கள், கோயில் பணியாளர்கள், கோயில் நிலத்தில் பணியாற்றும்
பண்ணைத் தொழிலாளர்கள் அனைவரும் சென்று கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கோயில் மாடுகளைப் பூட்டி கோயிலிலிருந்து புறப்பட்டு தங்களது நிலங்களில் பொன் ஏர் இட்டு வழிபட்டனர். தோல் கருவியால் ஒலி எழுப்பி மக்களுக்கு அறிவித்தும், பின்னர் ஊராட்சிகளில் உள்ள சங்குகளை ஒலிக்க செய்து அறிவித்தனர். காலமாற்றத்தால் பல நிகழ்வுகள் மறைந்தாலும், இப்பகுதி மக்கள் பொன் ஏர் இடும் நிகழ்வினை மறவாமல் கடைபிடித்து வருகின்றனர். இப்படி சித்திரையில் புதுமழைக்குப் பிறகு நல்ல நாள் பார்த்து | இப்பகுதி மக்களின் நம்பிக்கை.