அரசியல் செய்தி

கொழும்பு மாநகர சபையில் அரசியல் டீல்: மனசாட்சி எங்கே?

அரசியல் “டீல்” மூலமே கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் குற்றஞ்சாட்டினார்.

அன்று மனசாட்சி குறித்து பேசிய மேயர், இன்று கண்ணாடி முன் சென்று தனது மனசாட்சி குறித்து வினவவேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரிசா சாருக் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவினரை இவரே வழிநடத்துகின்றார்.

“ வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடந்தது. எமது கூட்டு எதிரணியில் உள்ள உறுப்பினர் ஒருவரை பொலிஸார் அழைத்து சென்றனர். அவர் கடைசி நேரத்திலேயே வாக்களிக்க வந்தார்.

மேலும் இரு உறுப்பினர்களை காணவில்லை. தொலைபேசியும் செயலிழந்துள்ளது. கூட்டு எதிரணியில் இருந்த உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

எனவே, இங்கு என்ன நடந்துள்ளது என்பதை ஊடகவியலாளர்கள் நிச்சயம் அறிவார்கள்.

வரவு- செலவுத் திட்டம் அன்று தோற்கடிக்கப்பட்டபோது மேயர் மனசாட்சி குறித்து கருத்து வெளியிட்டார். எனவே, ஆளுங்கட்சிக்கு இன்று எவ்வாறு பெரும்பான்மை கிடைத்தது என்பது பற்றி அவர் அவரது மனசாட்சியிடம் கேட்க வேண்டும்.

கூட்டு எதிரணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. மக்களுக்காக நாம் முன்னிலையாவோம்.” – என்றார் ரிசா சாருக்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!