கொழும்பில் பலரிடம் மோசடி செய்த போலி வைத்தியர்
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர் போல் வேடமணிந்து திரிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ முகமூடி அணிந்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேக நபர் பலரிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் சிரிஞ்சை, வைத்தியர்கள் அணியும் சீருடை, வைத்தியர்கள் பயன்படுத்தும் பல்வேறு நோய்கள் தொடர்பான பல அச்சிடப்பட்ட புத்தகங்கள் இருந்தன.
சந்தேக நபர் வைத்தியர் போல் வேடமணிந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுற்றித் திரிந்து வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களை ஏமாற்றியுள்ளார்.
அங்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை பார்க்க வருபவர்களிடம் சந்தேக நபர் கூறி ஏமாற்றி ஏமாற்றியுள்ளனர்.
இந்த மோசடி நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருவது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் உடை அணிந்த விதம் மற்றும் அவர் பேசும் விதம் போன்றவற்றால் ஏமாற்றப்பட்ட பலர் வெளிநாடு செல்வதாக ஆசை காட்டி பணம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பணம் கொடுக்க வந்தவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பொரளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிட்டம்புவ பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் 55 வயதான மாரவில பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நபரிடம் 75,000 ரூபாவை மோசடி செய்து தப்பிச் சென்றமை தொடர்பிலும் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.