ஐரோப்பா செய்தி

கூலிபடையினரை விமர்சித்தால் 15 வருடங்கள் சிறை தண்டனை : ரஷ்யா விதித்துள்ள அதிரடி உத்தரவு!

கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்ற கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில்  உக்ரேனுக்கு எதிராக வாக்னர் குழு எனும் தனியார் கூலிப்படையினரும் போரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொண்டர் படையினரை விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினர்கள்  வாக்களித்தனர்.  உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் இந்த சட்டமூலம் வரையப்பட்டது.

ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் அவைத் தலைவர் வியாசேஸ்லாவ் வொலோடின் இது தொடர்பாக கூறுகையில்  எமது நாட்டையும் பிரஜைகளையும் பாதுகாப்பதற்கு தமது உயிரை பணயம் வைப்பவர்கள்  ஆத்திரமூட்டல்கள் மற்றும் பொய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இச்சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தின் மேலவை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்ட பின்னர்  அது சட்டம் ஆகிவிடும்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி