குழி பறித்தவர்களே அதற்குள் விழுகிறார்கள் : பொருளாதாரம் குறித்து புடின் வெளியிட்ட கருத்து!
குழி பறித்தவர்களே அதற்குள் விழுகிறார்கள் : பொருளாதாரம் குறித்து புடின் வெளியிட்ட கருத்து!
ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ச்சிபாதையில் உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் நடைபெற்ற ரஷ்ய தொழிலதிபர்கள், மற்றும் தொழில்முனைவோர் ஒன்றியத்தின் மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது நாட்டின் வளர்ச்சிக்காக கடமையாற்றிய தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்தார். ரஷ்யா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தில் அதிகபட்சமாக 4.7 வீதம் சரிவைக் சந்தித்துள்ளது என புடின் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான காரணங்கள் நன்கு அறியப்பட்டவை எனக் குறிப்பிட்ட அவர், ரஷ்யாவில் செல்வங்களை பெருக்கிக் கொண்டு தற்போது மேற்கத்தேய நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் குறித்தும் விமர்சித்திருந்தார்.
மிகவும் கடினமான காலக்கட்டத்தில் ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ச்சிக்கு மாறியுள்ளதாகவும், முன்னேற்றத்தை தூண்டிய காரணிகளில் வெளிநாட்டு வர்த்தகத்தின் விரிவாக்கம் மிகப் பெரிய பங்காற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களுக்கு குழி தோண்டுபவர்கள் தனக்குள்ளேயே விழுகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஷ்ய உரங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்றால் ஐரோப்பிய விவசாயிகள் தங்கள் பயிர் உற்பத்தியை அதிகரித்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேற்கத்தேய வணிகங்கள் வெளியேறியது ரஷ்ய வணிகங்களுக்கான வாயப்புகளைத் திறந்துவிட்டதாகவும், வாய்ப்பை பயன்படுத்த தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுப்பதாகவும் புட்டின் தெரிவித்துள்ளார்.