கிரிப்டோ கரன்சி குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இந்திய அரசாங்கம் கிரிப்டோ கரன்சிகளின் அனைத்து வர்த்தகத்தையும் பணமோசடி தடுப்பு சட்டத்திற்கு உட்படுத்தியுள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் பரிமாற்றம் வரும் என நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சட்டத்தினபடி நிதி நிறுவனங்கள், அனைத்து பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் வைத்திருக்க வேண்டும். மற்றும் அதிகாரிகளால் கோரப்படும் போது இந்த தகவல்களை வழங்க வேண்டும்.
மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் பங்கேற்பதற்கு எதிராக முதலீட்டாளர்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்குபடுத்த முயற்சித்து வருகிறது.
(Visited 5 times, 1 visits today)