காசாவில் உதவி மையங்களை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் – 91 பேர் பலி!

காசா பகுதி முழுவதும் உள்ள உதவி மையங்களுக்கு அருகில் கடந்த நாளில் குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலியப் படைகள் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
காசாவில் “மோசமான பஞ்ச சூழ்நிலையை பயன்படுத்தி இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
முராஜில் உள்ள ஒரு உதவி மையத்திற்கு அருகில் 14 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நெட்சாரிமில் உள்ள மற்றொரு உதவி மையத்தில், குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக உதவி மையங்களுக்கு அருகில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)