கலிபோர்னியா பாலைவனத்தில் 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் தடம் புரண்டது
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் பாலைவனத்தில் இரும்புத் தாது ஏற்றிச் சென்ற 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நேற்று திங்கள்கிழமை தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இன்ஜின் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான எரிபொருள் கசிவு இருப்பதாகவும், எனினும் பொது அல்லது சுற்றுச்சூழலுக்கு இது அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் அண்மையில் தொடருந்தும் இவ்வாறான விபத்துக்கள் பதிவாகிவருவதாகவும், இந்த மாத தொடக்கத்தில், அரிசோனாவில் கார்ன் சிரப் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதும் இவ்வாறான ஒரு கோர சம்பவம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் இந்த விபத்தில் அதிகளவான பொருட்செதம் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.