கனடாவில் வேலை வாய்ப்பில் அதிகரித்த சலுகைகள் – புதிய வேலைகளை தேடும் மக்கள்!
கனடாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் வரும் ஆண்டில் புதிய வேலையைத் தேடத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் 2000 வேலை செய்யும் அல்லது வேலை தேடும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில், பதிலளித்தவர்களில் மூன்றில் ஒருவர் ஆண்டின் முதல் பாதியில் வேலைகளை மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இது ஜூலை 2025 உடன் ஒப்பிடும்போது 07 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வை நடத்திய ரோபர்ட் ஹாஃப் (Robert Half) நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கனடாவில் வழங்கப்படும் சலுகைகள், மக்கள் அதிக வசதியான வேலைகளை தேட முயல்வதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு போராட்டங்களுக்காக மக்கள் சிறப்பான அல்லது அதிகரித்த சம்பளத்துடன் கூடிய வேலைகளுக்கு செல்லவேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் தற்போது இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்ய முயன்றுவருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





