செய்தி

கனடாவில் பிரபல பிராண்ட்கள் பெயரில் போலி உற்பத்திகள் விற்பனை – இருவர் கைது

கனடாவில் இட்டோபிகோக் பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் பெருமளவிலான போலி உற்பத்திகள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 2 மில்லியன் டாலர் பெறுமதியான போலி உற்பத்திகள் இந்த கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.உலகின் முதல் நிலை பண்டக் குறிகளை கொண்ட ஆடைகள் இந்த விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு உயர் தரத்தினையுடைய பண்டக்குறி பெயர்களில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

இட்டோபிகொக் பகுதியில் கிப்ளிங் மற்றும் குயின்ஸ் வேர் வீதிகளுக்கு அருகாமையில் Brands Gone Wild என்ற இந்த ஆடையகம் அமைந்துள்ளது.Nike, Puma, Tommy Hilfiger, and Calvin Klein போன்ற பண்டக்குறிகளைக் கொண்ட உறபத்திகள் இந்தக் கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்த மோசடியுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!