செய்தி வட அமெரிக்கா

கனடாவிற்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.எதிர்வரும் வியாழக்கிழமை பைடன் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடா விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதன் பின்னர் கனடிய நாடாளுமன்றில் பைடன் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.

வட அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

அண்மையில் சீன உளவு பலூன்கள் அமெரிக்க, கனடிய பரப்பிற்குள் பறந்த விவகாரத்தின் பின்னர் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளன.கனடாவின் இராணுவ செலவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!