கணனி குற்றங்கள் தொடர்பில் 27 பேர் கைது!
கணனி குற்றங்கள் தொடர்பான இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 677 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக வெளிநாட்டவர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தள குற்றங்கள் குறித்து 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 25 வெளிநாட்டவர்கள் உட்பட 263 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 14 பேர் நைஜீரிய பிரஜைகளாகும்.
இதனிடையே உடனடியாக கடன் வழங்குவதாக கூறி வங்கிக்கணக்குகளின் விபரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் விபரங்களை பெற்று வங்கிக்கணக்குகளில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
(Visited 3 times, 1 visits today)