ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ரஷ்யா!
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ரஷ்ய ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி ஐ.நா பாதுகாப்பு சபையின் அடுத்த மாதத்திற்கான கூட்டங்களுக்கு ரஷ்யா தலைமை தாங்கவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பீ, தவறான தகவல்களை பரப்புவதற்கு ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்வதாகவும், உக்ரைனில் அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவும் கூறினார்.
துரதிஷ்ட வசமாக ரஷய் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ளது எனத் தெரிவித்த அவர், யதார்த்தத்தை மாற்றுவதற்கு ஏதுவான சட்டப்பாதை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் நிரந்தரமற்றவையாகும். முற்ற 10 உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு காலத்திற்கு பொதுசபையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அதன் தலைவர் பதவியானது அகர வரிசைப்படி ஒவ்வொரு வருடமும் மாறுகின்றமை குறிப்பிடத்தக்கது.