ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
2023 இல் இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உக்ரைனுக்கான 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி உக்ரைனுக்கு 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன்டர் லயன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் உக்ரைனுக்கு எங்கள் வருடாந்திர மேக்ரோ-நிதி உதவி தொகுப்பின் கீழ் மற்றொரு 1.5 பில்லியன் யூரோக்களை வழங்குகிறோம் எனத் தெரிவித்த அவர், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கவும், அதன் நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பை இயக்கவும், முக்கியமான சீர்திருத்தங்களை நடத்தவும் உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம். என்று உறுதியளித்தார்.
(Visited 2 times, 1 visits today)