ஆசியா செய்தி

ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 21 பேர் பலி

ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏமனில் ஹொடைடா துறைமுக நகரத்தின் அல்லுஹேயா கிராமத்திலிருந்து 27 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த குழுவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமரன் தீவிற்கு செங்கடல் வழியாக படகில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது கமரன் தீவிற்கு அருகே செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பாதுகாப்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் படகில் பயணித்த 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பேரை பாதுகாப்பு படைவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்தில் 2 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடலில் காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!