எத்தியோப்பியாவில் நிலவும் வறட்சியால் கால்நடைகள் பலியாகின்றன
மூன்று ஆண்டுகளாக மழை பெய்யாத காரணத்தினால், தெற்கு எத்தியோப்பிய கிராமமான குரா கலிச்சாவில் உள்ள விலங்குகள் இறந்து வருகின்றன. அழுகிய பசுக்களின் சடலங்கள் வறண்ட பூமியில் கிடக்கின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த வறட்சி காரணமாக 100 க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர் எனவும், தனது 75 மாடுகளில் 73 மாடுகளை பட்டினியால் இருந்துள்ளன எனவும் உள்ளூர் அரசாங்க அதிகாரி ஜிலோ வைல் தெரிவித்துள்ளார்.
அதன் அண்டை நாடுகளான சோமாலியா மற்றும் கென்யாவைப் போலவே, தெற்கு எத்தியோப்பியாவும் பல தசாப்தங்களில் ஆப்பிரிக்காவின் மிக மோசமான வறட்சியைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.
ஐந்து தொடர்ச்சியான மழைக்காலங்கள் ஏமாற்றம், மேலும் நடந்துகொண்டிருக்கும் மழைக்காலமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனிதாபிமான நெருக்கடியில் இருந்து விடுபட கூடுதல் உதவி தேவை என்று உதவி நிறுவனங்களின் எச்சரிக்கைகளைத் தூண்டுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.